ரிவோல்வர் வகை துப்பாக்கியை ஒத்த ஆயுதமொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மரிய மாவத்தை பகுதியில் நேற்று (12) இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மஹரகம தும்மரிய மாவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
