Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டம் விடுவதைத் தவிர்க்கவும்!

#KiteWarning #KiteSafety #AviationSafety #PublicAlert #FlightSafety #EmergencyWarning #StaySafe #SriLankaNews #SafetyAlert #BreakingNews

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தற்போது நடைபெற்று வரும் பட்டம் காலம் என்பதால்  , நாட்டில் உள்ள ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது தற்போது அதிகரித்துள்ளது.

இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உலகளவில் விமான விபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது விமான செயல்பாடுகளை நேரடி தடையாக அமைகிறது .

இலங்கையின் கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகொட, சீனக்குடா , அனுராதபுரம், பாலலி, கட்டுக்குருந்த, கொக்கல, வவுனியா, வீரவில, மட்டக்களப்பு மற்றும் மத்தள ஆகிய இடங்களில் உள்ள ஓடுபாதைகளைச் சுற்றி இத்தகைய பரவலான பட்டம் விடுதல் தற்போது அதிக அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த அபாயகரமான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (2026.07.15) பயிற்சிக்காக ரத்மலான விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று,காத்தாடி விடப்பட்ட நூலில் சிக்கியதில் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம்,மீண்டும் ரத்மலான விமான நிலையத்திற்கே மீண்டும் தரையிறங்கியுள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில், விமானத்தின் இடது சக்கரம், இடது எஞ்சின் பகுதி மற்றும் பல பாகங்களில் காத்தாடி நூல்கள் கடுமையாகச் சிக்கியிருந்தது தெரியவந்தது.

காத்தாடி நூல்களோ அல்லது அதன் பாகங்களோ எஞ்சினுக்குள் அல்லது அதன் இயக்க முறைமைக்குள் நுழைந்தால், விமானம் முழுவதற்கும் கடுமையான சேதம் ஏற்படடக்கூடிய நேரடி அபாயம் உள்ளது.  இதனால் பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, விமானப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பயணிகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், ஓடுபாதைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய பகுதிகளில் காத்தாடி விடுவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வைகாசி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வன்னிமுந்தல் படகுப் போட்டியில் குழு தாக்குதல்: ஒருவர் காயம், ஒருவர் கைது

ஆனி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் 108 யானைகள் உயிரிழப்பு!

சித்திரை 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube