Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

WhatsApp-இல் மீண்டும் ChatGPT

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில் ChatGPT மீண்டும் WhatsApp-இல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தத் தகவல்களின்படி, கடந்த ஆறு மாதங்களாக WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்ட நிலையில், 2026 ஜூலை 13 முதல் சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், 2025 ஒக்டோபரில் Meta நிறுவனம் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT மற்றும் Microsoft Copilot போன்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியதாகவும், அதற்கு “சர்வர் சுமை அதிகரிப்பு” காரணம் என விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், 2026 ஜூன் 9 அன்று ஐரோப்பிய ஒன்றியம் Meta நிறுவனத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-க்கான அணுகலை மீண்டும் திறக்க உத்தரவிட்டதாகவும், விதிகளை மீறினால் ஆண்டு வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரித்ததாகவும் வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியப் பயனர்கள் சரிபார்க்கப்பட்ட எண்ணின் ஊடாக WhatsApp-இல் ChatGPT-ஐ பயன்படுத்தி உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம் மற்றும் AI பட உருவாக்கம் உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ChatGPT-ஐ பயன்படுத்திய பின்னர் சில WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக சில பயனர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும், சரிபார்க்கப்பட்ட அதிகாரபூர்வ எண்ணை மட்டுமே பயன்படுத்துமாறு OpenAI அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் தொடரும் QR குறியீட்டு முறைமை!

சித்திரை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாத்தறை, வெல்லமடம பகுதியில் விபத்து – இருவர் பலி, 6 பேர் படுகாயம்

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோப்பாய் – மோதர்கேணி வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube