Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

உரிமம் இன்றி கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் விற்பனர்களுக்கு ஒரு மாதகால அவகாசம்!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த அலகின் முக்கிய பணியாகும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் விசாரணைப் பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் உத்தியோகபூர்வமாக நேற்று (4) முதல் இந்த அணியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கைத்தொலைபேசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இந்த விசாரணைப் பிரிவின் முதன்மைப் பணியாகும்.

எவ்வாறெனினும், உரிய அனுமதிப்பத்திரமின்றி கைத்தொலைபேசிகளை விற்பனை செய்பவர்கள் தமக்கான உரிமத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அனுமதிப்பத்திரம் இல்லாத சில்லறை விற்பனை நிலையங்களில் நுகர்வோரால் கொள்வனவு செய்யப்படும் கைத்தொலைபேசிகளின் சேவை இணைப்பு அல்லது பாதுகாப்புச் சேவைகள் தொடர்பாக எழும் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்தில் செம்மணி அகழ்வு – விமல் வீரவன்ச

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அனைவரும் கட்டுப்படவேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ,

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube