போட்டி ஒத்திவைப்பு மற்றும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறை தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியின் முக்கிய உரிமையாளர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையில் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருந்த தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே கைது இடம்பெற்றுள்ளது.
லங்கா பிறீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது அத்தியாயம் இன்று (17) மாலை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
