Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் காகிதத்திலான நாணயத்தாள்களுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் நாணயத்தாள்களை அறிமுகம் செய்வது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக 10 மற்றும் 20 ரூபாய் நாணயத்தாள்களை பிளாஸ்டிக் தாள்களில் அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பிளாஸ்டிக் நாணயத்தாள்களில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் (Holograms, Transparent Windows) இணைக்கப்படுவதால், நாணயத்தாள்களை அச்சிடுவது மிகவும் கடினம்.

அதேவேளை காகித நாணயத்தாள்கள் அடிக்கடி கிழிந்து போவதால், அவற்றை மீண்டும் அச்சிடுவதற்கு அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிடுகிறது. பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதால், மறுமுறை அச்சிடும் செலவு குறையும்.

இந்தச் சோதனை முயற்சிகள் வெற்றிபெற்றால், 2027-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் முழுவீச்சில் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பிளாஸ்டிக் நாணயத்தாள்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாகும்பரவில் போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பேருந்து சாரதிகள் சிக்கினர்

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 31,000 பேர் பாதிப்பு !

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் இந்தியாவின் முதலீடுகள் குறித்து தெற்கு அஞ்சுவது ஏன்?- ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கேள்வி

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்களை கைதுசெய்ய 3 விசேட குழுக்கள்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube