FIFA World Cup 2026 தொடரின் இறுதிப் போட்டியை இலங்கையிலுள்ள கால்பந்து ரசிகர்கள் காலி முகத்திடலில் உள்ள பிரம்மாண்ட திரையில் நேரலையாகப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பொதுமக்களுக்கான இலவச நேரடி ஒளிபரப்பு நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை இரவு 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியை நேரில் காணவரும் ரசிகர்களை தத்தமது தேசியக் கொடிகளுடன் வருகை தந்து கொண்டாட்டங்களில் இணையுமாறு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த உலகக் கிண்ணத் தொடரின் மிக முக்கிய மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியும், நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையில் உள்ள அனைத்து கால்பந்து ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த நிகழ்வு முற்றிலும் இலவசமாக திறந்தவெளியில் நடத்தப்படவுள்ளது.
