2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு மற்றும் மூன்றாம் தவணை ஆரம்பம் தொடர்பான அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை 2026 ஜூலை 24 (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூலை 27 (திங்கட்கிழமை) ஆரம்பமாகும்.
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளதுடன், மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஆகஸ்ட் 3 (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
