Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – விசாரணைகளைத் துரிதப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

அக்டோபர் 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவத்தை ‘குற்றச் செயல்’ என நீர்கொழும்பு நீதிவான் சிலாணி பெரேரா அறிவித்துள்ளார்.

குறித்த மரணங்கள் தொடர்பில் தேவையான விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கட்டளையிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கைகளைப் பரிசீலித்தும், சாட்சியங்களை ஆராய்ந்தும் மரண விசாரணை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இரண்டு பட்டியல்களைக் கொண்ட மரண விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பானதாகவும், மற்றையது உயிரிழந்த கைதிகள் தொடர்பானதாகவும் அமைந்திருந்தது.

அந்த அறிக்கைகளின்படி, 19 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள், அத்துடன் உள் உறுப்புகளில் ஏற்பட்ட கடுமையான இரத்தப்போக்கு ஆகியவை மரணங்களுக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில், 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உள்ளிட்ட 106 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு, அடையாள அணிவகுப்புகளுக்காக ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அடையாள அணிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், துப்பாக்கிகள், இரத்த மாதிரிகள் மற்றும் மரபணுப் பரிசோதனைகள் தொடர்பான அரசாங்கப் பகுப்பாய்வு அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான செனக பெரேரா, அரசாங்கப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதில் நிலவும் தாமதம் விசாரணைகளைப் பாதிப்பதாகக் குறிப்பிட்டு, அவற்றை விரைவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சான்றுப் பொருட்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசாங்கப் பகுப்பாய்வு அதிகாரிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புவதுடன், அதனை நேரடியாகக் கையளிக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 106 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடையாள அணிவகுப்புகளுக்காக ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லாத சந்தேகநபர்கள், அடுத்த விசாரணையின்போது வாட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கைதிகள் சார்பில் சட்டத்தரணி செனக பெரேரா நீதிமன்றத்தில் ஆஜரானார். வர்த்தகக் குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன களுவாரியாய்ச்சி தலைமையிலான குழுவினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் பின்னர் உயிருடன் வீட்டுக்கு திரும்பிய விசித்திரம்

செப்டம்பர் 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்க்கட்சியினரே நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடல்!

ஜூலை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் சேகரிப்பு

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழப்ப நிலையை ஏற்படுத்திய சாமர மீது சபாநாயகரின் நடவடிக்கை!

மே 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube