ஒருமைப்பாடு கலாசாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு வாரம் இன்று முதல் 31ம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக குமாநாணக்கவின் கையொப்பத்துடனான சுற்றுநிரூபத்தின் மூலம் இன்று வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு வாரம் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய ஒருமைப்பாடு சத்தியப்பிரமாணம் வழங்குதல் மற்றும் ஒழுக்க நெறி தொகுப்பினை அறிமுகப்படுத்தல் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச சேவையின் செயற்திறன், குணநலன்கள், பாரபட்சமற்ற தன்மையை மேம்படுத்தல் உட்பட ஊழல் அற்ற முன்மாதிரி நிர்வாக சூழல் ஒன்றை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.
