Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து சவுதி தாக்குதல்!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து சவுதி அரேபியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM உடன் ஒருங்கிணைந்து புதன்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத் பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் ஈராக்கிலிருந்து ஏவிய பல ட்ரோன்களை சவுதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் மோதலை விரும்பவில்லை எனவும், ஆனால் எதிர்கொள்ளும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிப்போம் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈராக்கிய பிரதமர் அலி அல்-சைதி சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஈராக்கிய நிலப்பரப்பு பிற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான “இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் இன் ஈராக்” இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, சவுதியின் கூற்றுகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

14 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய யானை

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவு

ஆடி 28, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது பூமி தப்பித் பிழைக்க வாய்ப்புண்டு!

ஆடி 6, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube