பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கினை நவம்பர் மாதம் 16ம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது வழக்குடன் தொடர்புடைய இரு இந்திய பிரஜைகளின் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின் கீழ் அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
