நீர்கொழும்பு போலவலான பகுதியில் பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சம்பவத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கட்டான பொலிஸாரும், நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்தனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்கள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
