Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

ஆசிய வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ADB தர்மகர்த்தா தலைவர் மாசாடோ காண்டா (Masato Kanda) சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை – வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் நேரில் அஞ்சலி!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட 5 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube