Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

#யாழ்ப்பாணம் #கிரிக்கெட்மைதானம் #யாழ்ப்பாணசர்வதேசகிரிக்கெட் #இலங்கைவிளையாட்டு #விளையாட்டுத்துறை #கிரிக்கெட்செய்திகள்

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கான காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உட்புற விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த மைதானத்தை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்கு காரணமாக நிர்மாணப் பணிகள் தடைப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மக்களே எனவும், குறிப்பாக இளம் விளையாட்டு வீரர்களின் கனவுகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

“அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம்” என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் இறுதிச் சடங்கு வீட்டில் உயிருடன் வந்தார்!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி விலக தீர்மானம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வெசாக் விழா, விசேட அரச அறிவிப்புகள் மற்றும் ஏற்பாடுகள்.

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube