Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோசித்தாவுக்கு எதிரான வழக்கு – பொய் சாட்சியம் வழங்கியவருக்கு 20 இலட்சம் ரூபா சரீர பிணை

புரட்டாதி 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

பணச் சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சியமளித்த நபரை 20 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதிபதி அவருக்கு பிணைவழங்கி உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், நீதிமன்றத்தில் பொய் சாட்சியமளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அனைத்து நாட்களிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த சாட்சியக்காரருக்கு நீதிபதி கடுமையாக எச்சரித்தார்.

காணி உள்ளிட்ட சொத்து விற்பனையில் ஈடுபடும் தரகரான பாலித கமகே என்பவரே இவ்வாறு எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சாட்சியாளர் புலனாய்வு அதிகாரிகளுக்கு அளித்த வாக்குமூலங்களுக்கு முரணான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை முறைப்பாட்டுக்கு பாதகமான சாட்சியக்காரராக அறிவித்து குறுக்கு விசாரணை செய்வதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார அனுமதி கோரியதுடன், அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சாட்சியாளர், தான் காணி உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்யும் தரகர் எனவும், இவ்வழக்கு தொடர்பில் இரண்டு வாக்குமூலங்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் இருந்த போது, அங்கு பணியாற்றிய தரிந்து என்பவருக்கு அரச கொள்முதல் ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக 142 இலட்சம் ரூபா வழங்கியதாக முதலில் கூறியபோதிலும், பின்னர் அளித்த மூன்றாவது வாக்குமூலத்தில் அந்த முன்னைய கூற்று பொய் எனக் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கையில், சாட்சியாளரின் இந்தக் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளித்தால் நீதிமன்றச் செயற்பாடுகள் நகைப்புக்குள்ளாக நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்தே, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காது சரியாகச் சாட்சியமளிக்குமாறு சாட்சியக்காரருக்கு நீதிபதி கடுமையாக எச்சரித்திருந்தார். இது தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக எயார் வைஸ் மார்ஷல் இந்திக்க விக்ரமசிங்க பொறுப்பேற்பு

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 20, 2026
முக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம்!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் அனுப்பிவைப்பு-

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube