Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

#PoliceTransfer #SriLankaPolice #PoliceNews #BreakingNews #SriLanka #PoliceOfficers #TransferUpdate #SLNews #TamilNews #LatestNews #இலங்கை #பொலிஸ் #இடமாற்றம் #உடனடி_செய்தி #தமிழ்செய்திகள்

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் கடமையாற்றுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பதவியில் இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் கே.பி. கருணாரத்ன அப்பதவியில் இருந்து வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இதைத் தவிர, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube