Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில பெரஹெராவால் போக்குவரத்து கட்டுப்பாடு!

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பெல்லன்வில எசல மகா பெரஹெராவை முன்னிட்டு, பொரலஸ்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 13 முதல் 16ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாவாட பெரஹெரா – ஆகஸ்ட் 13

ஆகஸ்ட் 13ஆம் திகதி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, 119 மகரகம–தெஹிவளை பேருந்து வழித்தடத்தில் பொரலஸ்கமுவ சந்தி முதல் பெல்லந்தர சந்தி வரையான பகுதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும்.

மகரகம மற்றும் பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பெபிலியான சந்தி மற்றும் நெதிமல ஊடாக மாற்றுப் பாதையைப் பயன்படுத்தலாம்.

ரன்சீவலி பெரஹெரா – ஆகஸ்ட் 14

ஆகஸ்ட் 14ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் ரன்சீவலி பெரஹெரா, ஆகஸ்ட் 15ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பெல்லந்தர சந்தி, சோமரத்ன மாவத்தை மற்றும் விஹார மாவத்தை ஊடாக பெரஹெரா பயணிக்கும் நேரங்களில் 119 பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். இலகுரக வாகனங்கள் 117ஆம் பாதையையும், கனரக வாகனங்கள் பெபிலியான மற்றும் பிலியந்தல சந்திகள் ஊடான மாற்றுப் பாதைகளையும் பயன்படுத்தலாம்.

ரந்தோலி மகா பெரஹெரா – ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் ரந்தோலி மகா பெரஹெரா, ஆகஸ்ட் 16ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பொரலஸ்கமுவ, பெல்லந்தர மற்றும் நெதிமல சந்திகள் உள்ளிட்ட பகுதிகளிலும், அத்திடிய காவல்துறை பயிற்சிக் கல்லூரி சந்தி முதல் பெபிலியான சந்தி வரையான 117ஆம் பாதையிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் காவல்துறையினரின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!

ஆவணி 13, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

மோடி வீடியோ முடக்கம்: மெட்டா மன்னிப்பு!

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்தில் திருட்டு பொருட்களை வாங்கிய நபரும் கைது!

வைகாசி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தாலும், எண்ணெய் விலை சரிவு!

ஆடி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube