Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!

#செம்மணி #செம்மணிமனிதபுதைகுழி #யாழ்ப்பாணம் #மனிதபுதைகுழி #புதைகுழி #இலங்கை #Jaffna #Chemmani #ChemmaniMassGrave #SriLanka #BreakingNews #TamilNews #தமிழ்செய்தி

ஆவணி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்ட மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 530 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்தப் பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் படம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது – அயதுல்லா மொஜ்தபா கமேனி!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் பூதவுடல் நல்லடக்கம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube