Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஆகஸ்ட் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பலரும் காயமடைந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) உறுதிப்படுத்தியுள்ளது.

‘புளோரஸ்’ (Flores) தீவுப் பகுதியில் நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பிராந்தியத்தில் பெரும் பீதியையும் நிலைகுலைவையும் ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் மிகக் குறைந்த ஆழத்தில் (சுமார் 10 கிலோமீற்றர்) அமைந்திருந்ததால், இதன் தாக்கம் மிகக் கடுமையாக உணரப்பட்டது.

இதன் காரணமாகத் தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது. எனினும், கடலோரப் பகுதிகளில் 1.5 மீற்றருக்கும் அதிகமான அளவில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய இயற்கை அனர்த்தத்தினால் 350-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாகப் போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியுள்ளதாலும், சில தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் இன்னும் சென்றடைய முடியாத நிலை காணப்படுவதாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் அறிவிப்பு

ஜூலை 27, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

ஏப்ரல் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹியங்கனையில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயது இளைஞன் உயிரிழப்பு

செப்டம்பர் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றத்தால் மசகு எண்ணெய் விலை 3% உயர்வு!

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube