Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒற்றுமையின்மையே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததற்கான காரணம்

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தேசிய வலைப்பந்தாட்ட அணிக்குள் நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒழுங்கீன நடத்தைகளே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழக்கக் காரணம் என முன்னாள் அணித்தலைவரும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் தமயந்தி ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆசிய வலைப்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரின் போது, மூத்த வீராங்கனைகள் சிலர் இளநிலை வீராங்கனைகளைப் தகாத வார்த்தைகளால் தூற்றியதாகவும், இதனால் இளம் வீராங்கனைகள் மனமுடைந்து போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணித் தேர்வின் போதே பயிற்றுவிப்பாளர், வீராங்கனைகளிடையே பிளவுகளை ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டிய அவர், போட்டித் தொடருக்கு முன்னரே திறமையான மூன்று இளம் வீராங்கனைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷங்காயில் நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரை நிறைவுசெய்து கொண்டு தேசிய அணி நேற்று கொழும்பு திரும்பிய நிலையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளுக்கு!

ஆடி 15, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

118 பெரும்பான்மைக்கு விஜய் எதிர்கட்சிகளோடு பேச்சுவார்த்தை!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின்” 20ஆவது ஆண்டு எழுச்சி விழா!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கை!

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube