மெகசின் சிறைச்சாலையின் பாதுகாப்புச் சுவருக்கு மேலால் வீசப்பட்ட, தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு வீசப்பட்ட பொதியைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 30 கைத்தொலைபேசி மின்கலன்கள் , 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா என்ற போதைப்பொருள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இச் சம்பவம் தொடர்பாக சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
