Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – சேனாவெளி குளத்தின் நீர் வெற்றியதால் அவதியுறும் விவசாயிகள்

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

எல்நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வறட்சி காரணமாக திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சேனாவெளி குளம் நீர் மட்டத்தின் அளவு வற்றி வரண்டு காணப்படுகிறது.

நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் குளத்தின் பெரும்பகுதி தற்போது வறண்ட நிலையில் காணப்படுவதுடன், இதனை அண்டியுள்ள விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

குறிப்பாக, குளத்தின் நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையை மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கான மாற்று நீர்வழங்கல் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடுமையான வெப்பநிலையும் நிலவுவதுடன் நெற் செய்கை விவசாயத்தை நம்பியே குறித்த குளத்தை அண்டிய விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறாக எதிர்வரும் மாதங்களில் எல்நினோவின் தாக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 3, 2026
இந்தியாஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

வறண்ட வானிலை காரணமாக எல் நினோ நிலைமைகள் உருவாகலாம்!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

ஆனி 26, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உரிமம் இன்றி கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் விற்பனர்களுக்கு ஒரு மாதகால அவகாசம்!

ஆடி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube