கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர்ரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23), கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழையும் பிரதான சோதனைச் சாவடிக்கு அருகிலேயே பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இதனை அடுத்து, குறித்த சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
