பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘களுபோவில அவிஷ்க’வின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்த முக்கிய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஹுவலை – களுபோவில பகுதியில் வைத்து, விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையிலேயே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிலோ 10 கிராம் ,ஹெரோயின் 504 கிராம் ,இதர பொருட்கள் 1 இலத்திரனியல் தராசு, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் தீவிர விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
