Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது

புரட்டாதி 18, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ள நிலையில், வாகனங்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பவர்களுக்கு இதுவே மிகச்சிறந்த தருணம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதியினால் அரசாங்கத்திற்குப் பாரிய வரி இழப்பு ஏற்படுவதாகப் புதிய வாகன முகவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் அச்சங்கம் மறுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (17) கருத்து வெளியிட்ட வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐந்து வருடங்களாக நிலவிய இறக்குமதித் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையின் தேவைக்கு அதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டமையினால் தற்போதைய விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, இறக்குமதியாளர்கள் பலர் நஷ்டத்தை எதிர்கொண்டு செலவிட்ட தொகையை விடக் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

டொயோட்டா யார்ட்ஸ், ரைஸ், ஹோண்டா வெசல், சுசுகி வேகன் ஆர், டைஹாட்சு மிரா போன்ற சிறிய ரக வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதால், சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி விலைகள் உயருவதற்கு முன்னர் வாகனங்களை வாங்குவது நுகர்வோருக்குச் சாதகமாக அமையும்.

பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதியினால் அரசாங்கத்திற்கு 120 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகப் புதிய வாகன வர்த்தகர்கள் சங்கம் கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். 2016ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியின்படி, புதிய வாகனங்களுக்கான சுங்கப் பெறுமதி தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ விலைப்பட்டியல் மூலமே கணக்கிடப்பட வேண்டும்.

ஆனால், புதிய வாகன இறக்குமதியாளர்கள் பலர் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் வாங்காமல், இடைத்தரகு வர்த்தக நிறுவனங்கள் மூலமாக வாகனங்களைக் கொண்டுவந்து குறைந்த பெறுமதியைக் காண்பித்து வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர்.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்பவர்களே உண்மையில் புதிய வாகனங்களுக்கு இணையான அதிகபட்ச சுங்க வரிகளைச் செலுத்துகின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள பெறுமதி வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அது தற்போதைய காலத்திற்கு ஏற்ப உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்.

வாகனங்களின் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடுவதில் ஏற்படும் இத்தகைய முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க, எஞ்சின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்ட எளிமையான அலகு வரி முறையை அரசாங்கம் மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube