Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்மலை 50 ஏக்கர் பாலம் இடிந்து விழும் அபாயம் – 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அச்சத்தில்

#கொத்மலை #50ஏக்கர் #பாலம் #பாலம்ஆபத்து #நுவரெலியா

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தை 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த புயலின் போது பாலம் சேதமடைந்ததாகவும், அதிகாரிகளிடம் பலமுறை அறிவித்தும் இதுவரை நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழையால் பாலத்தின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதுடன், சில பகுதிகள் உடைந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பொதுமக்கள் தற்காலிகமாக மரப்பலகைகளைப் பயன்படுத்தி பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இதனால் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.

எனவே, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன்னர் அதிகாரிகள் உடனடியாக பாலத்தை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா நிருபர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுர பள்ளிவாசல் உண்டியல் உடைப்பு!

ஆடி 10, 2026
இலங்கை

கிரிஷ் வழக்கிற்கு திகதி அறிவிப்பு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதை பொருள் வியாபாரியிடம் பணம் மற்றும் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube