அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், இன்று (28) ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாளை வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொணராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்றும் அத்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
