Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

#ஜனாதிபதி #டிஜிட்டல்மயமாக்கல் #டிஜிட்டல்மயப்படுத்தல் #வேலைத்திட்டம் #டிஜிட்டல்இலங்கை #இலங்கை #அரசாங்கம் #Digitalization #DigitalSriLanka #SriLanka #Government #Development #NewsUpdate

புரட்டாதி 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்

மக்களுக்கு மிகவும் விரைவான, செயற்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரச சேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் “உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் தேசிய கட்டமைப்பு” தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றமொன்றினால் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துப் பணிகளையும் இனங்கண்டு, அவற்றில் டிஜிட்டல் கட்டமைப்புக்குள் உள்ளடக்கக்கூடிய மற்றும் உள்ளடக்க முடியாத சேவைகள் எவை என வேறுபடுத்திக் கொள்ளுமாறும், தற்போதுள்ள கட்டமைப்புகளினால் அந்த அனைத்து சேவைகளும் உள்ளடக்கப்படுகின்றதா என்பதை கண்டறியுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

பல்வேறு நிறுவனங்களால் தனித்தனியாகச் செயற்படுத்தப்படும் வெவ்வேறான கட்டமைப்புகளுக்குப் பதிலாக, முழுமையான அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரு தேசியக் கட்டமைப்பை ஸ்தாபிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அந்தப் பணிகளின் போது பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டமைப்புகளில் காணப்படும் குறைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொண்டு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் பணிகளை செயற்திறனுடன் ஒருங்கிணைப்பதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகளை ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி இங்கு பணிப்புரை விடுத்தார்.

உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற வரி செலுத்துதல்கள், பொது வருமானங்கள் (விளம்பரப் பலகைக் கட்டணங்கள், விளையாட்டரங்குகள் மற்றும் பொது மண்டபங்களை முன்பதிவு செய்தல்), விற்பனை நிலைய வாடகைகள், நீர் கட்டணங்கள் மற்றும் பல்வேறு அனுமதிப் பத்திரங்கள்/உரிமங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வழிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வாய்த்தலங்களில் பணத்திற்காக பெண்களின் புகைப்படங்களை விற்பனை செய்த இணையவழி குழுவினர்

ஆவணி 27, 2026
இலங்கைவானிலை

 இலங்கையின் காலநிலையை பாதிக்கவுள்ள எல் நினோ – விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று!

ஆனி 10, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சதம் விளாசினார் டக்கெட்

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் மோதி விபத்து – மூவர் படுகாயம்

ஆவணி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube