X தளத்தின் போட்டி நிறுவனங்களுடன் நீண்டகால கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வரும் எலான் மஸ்க், Instagram தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி X சமூக ஊடகத்தில் வெளியான பதிவொன்றுக்கு பதிலளித்த எலான் மஸ்க் , “Instagram is for girls” என குறிப்பிட்டுள்ளார்.
Geiger Capital நிறுவனம் தனது Instagram கணக்கை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளதாகவும், Instagram இயல்பாகவே பெண்களுக்கான செயலி எனவும் குறிப்பிட்டு வெளியிட்ட பதிவுக்கே மஸ்க் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.
மஸ்கின் இந்தக் கருத்து X சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பயனர்கள் அதற்கு பதிலளித்துள்ளனர்.
இதேவேளை, Instagram தொடர்பில் எலான் மஸ்க் இவ்வாறான கருத்தை வெளியிடுவது இது முதல் முறையல்ல என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்திலும் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பான கலந்துரையாடலின்போது, “Instagram is for girls” என மஸ்க் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது அந்தக் கருத்துகளுக்கு அப்போதும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் பாலின அடிப்படையிலான பொதுமைப்படுத்தல்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
