பொரளை மற்றும் மருதானைக்கு இடையிலான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணி காரணமாகவே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
