யாழ்ப்பாணம், நல்லூரில் தாய் மற்றும் மகள் மீது கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, காதலன் பெண்ணையும் அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, சந்தேகநபர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நல்லூரைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
