ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கண் பரிசோதனை மற்றும் செவிப்புலன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி நிதியத்தின் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக மாணவர்களின் பார்வை மற்றும் செவிப்புலன் தொடர்பான தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கல்வியைத் தொடர்வதற்கு இத்தகைய திட்டங்கள் உதவியாக அமையக்கூடும்
