இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை நம்பி மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என உறுதியளித்துள்ள அமைச்சர், உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளின் அடிப்படையில் எரிபொருளை அதிகளவில் சேமிக்க முயற்சிப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
