மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், உயிரிழந்ததாகக் கருதப்பட்ட 15 வயது இளம்பெண் ஒருவர் சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பின்னர் தனது இறுதிச் சடங்கின்போது சவப்பெட்டிக்குள் அசைந்து கண் திறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவிசே மாகாணத்தின் எல் ஜோகோட் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கருதியுள்ளனர்.
இதையடுத்து, அவரை வீட்டுக்குக் கொண்டுவந்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சுமார் எட்டு மணி நேரத்திற்குப் பின்னர், சவப்பெட்டிக்குள் அசைவுகள் தென்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அதனைத் திறந்தபோது, அந்த இளம்பெண் கண் திறந்து அசைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர் உண்மையில் மருத்துவ ரீதியாக உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டாரா, என்ன காரணத்தால் இவ்வாறு நிகழ்ந்தது என்பன தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ விளக்கம் வெளியாகவில்லை.