மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்தத் திடீர் மின் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
