Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக் கம்பியில் சிக்கி ஐந்து வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொலன்னறுவை, அரலகங்வில, எல்லேவெவ, தயாசிரிகம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி ஐந்து வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன், ஜா-எல, தளுகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனது குடும்பத்தினருடன் தயாசிரிகம பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் முற்றத்தில் மற்றொரு சிறுவனுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியுள்ளார்.

இதன்போது சிறுவனைக் காப்பாற்ற முயன்ற வீட்டின் உரிமையாளரான 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்துள்ளார்.

பின்னர் அவர் தெஹியத்தகண்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் நவம்பர் 9

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசிய AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

ஜூலை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மூவர் கைது

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகர்வுக்கு தகாத 4,250 மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்புடன் நால்வர் கைது!

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube