Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிக்குகள் சத்தியாக்கிரகம்

#ஞானசாரதேரர் #கலகொடஅத்தேஞானசாரதேரர் #பொதுபலசேனா #பௌத்தபிக்குகள் #சத்தியாக்கிரகபோராட்டம் #விகாரமகாதேவிபூங்கா #கொழும்பு #இலங்கைஅரசியல் #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #ஞானசாரதேரர்விடுதலை #SriLankaNews #GnanasaraThero #BoduBalaSena #Colombo #TamilNews #BreakingNews

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (19) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது, தற்காலிகக் கொட்டகை அமைக்க முயற்சித்த வேளையில் பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்ட இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள், பின்னர் புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

எனினும், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிவித்த பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் தவறிவீழ்ந்து பலி!

மே 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஜூலை 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

ஜூன் 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலகப் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக இருக்கும் என IMF கணிப்பு

அக்டோபர் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube