HSBC உலகளாவிய சேவை மையத்தை இலங்கையிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை இடம்பெற்றால், இலங்கையில் சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இடமாற்ற நடவடிக்கை 2027 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையக்கூடும் எனத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலையில், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், புதிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
HSBC சேவை மையம் இலங்கையிலிருந்து வெளியேறுவது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தடுப்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
