மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (19) காலை 11.30 க்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, நாளை (20) அதிகாலை ஒரு மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
