இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2025 ஜனவரி முதல் செப்டெம்பர் வரை 2,472.9 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவான சுற்றுலா வருமானம், 2026ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,639,679 ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீத வீழ்ச்சியாகும்.
