Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஜிம்பாப்வேயை 158 ஓட்டங்களால் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

#ஆப்கானிஸ்தான் #ஜிம்பாப்வே #கிரிக்கெட் #ஆப்கானிஸ்தான்_வெற்றி #ரஷித்_கான் #செதிகுல்லா_அடல் #AfghanistanCricket #ZimbabweCricket #CricketNews #ODICricket #RashidKhan #SediqullahAtal #TriSeries #SportsNews #CricketUpdates #SriLankaTamilNews #TamilSportsNews #LatestSportsNews

அக்டோபர் 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 158 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (19) நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய செதிகுல்லா அடல் 102 ஓட்டங்களைப் பெற்று சதமடித்தார். இப்ராஹிம் சத்ரான் 90 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணியின் பிராட் எவான்ஸ் மற்றும் எர்னெஸ்ட் மசுகு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வே அணியின் சார்பில் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 48 ஓட்டங்களையும், ரியான் பர்ல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். பசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 158 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வசதிகளை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் – கல்வி பிரதி அமைச்சர்

அக்டோபர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு!

மே 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube