மட்டக்களப்பு கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான நான்கு சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (20) காலை 9 மணியளவில் காத்தான்குடி முதல் மாங்காடு வரையிலான கடற்பரப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட வலைகள் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மற்றும் கல்லடி கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சுருக்கு வலைப் பயன்பாட்டினால் மீன்வளம் அழிவடைந்து வருவதாகத் தெரிவித்து, இதனைத் தடை செய்யக் கோரி மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த அமைப்பினர் கடற்படை உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
