தொடர் கனமழை காரணமாக, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் எட்டு திறக்கப்பட்டுள்ளன. இதனால் வினாடிக்கு 7,884 கனஅடி நீர் கலா ஓயாவில் திறந்துவிடப்படுகிறது.
இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், கலா ஓயா மற்றும் கொத்மலை ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
