எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, முன்னணி வங்கி ஒன்றினால் விசேட பரிசுகள் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) எச்சரித்துள்ளது.
குறித்த வங்கியினால் அவ்வாறான பரிசுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் திருடுவதற்கான மோசடி முயற்சியாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
