Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலன்னறுவையில் புதிய யானைகள் காப்பகம்!

அக்டோபர் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொலன்னறுவை, கலஹாக்கலை பகுதியில் வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் 15 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புதிய யானைகள் காப்பகம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மனித – யானை மோதல்கள், வெள்ளப்பெருக்கு, ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களால் தாயைப் பிரிந்த அல்லது காயமடைந்த யானைக்குட்டிகளின் உயிரைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கால்நடை மருத்துவர்கள், வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பின்னர், கலஹாக்கலை பகுதி இக்காப்பகத்தை அமைப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் உடவளவை பகுதியில் மட்டுமே யானைகள் காப்பகம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காயமடைந்த யானைக்குட்டிகளை உடவளவைக்கு எடுத்துச் செல்வதற்கு 7 முதல் 9 மணித்தியாலங்கள் வரை தேவைப்படுவதால், நீண்ட தூரப் பயணம் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

இந்தப் புதிய காப்பகம் அமைக்கப்படுவதன் மூலம், காயமடைந்த மற்றும் தாயைப் பிரிந்த யானைக்குட்டிகளுக்கு விரைவாகச் சிகிச்சை அளித்து, அவற்றைப் பராமரிப்பதற்கான வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இத்திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஊக்கமடைவதுடன், யானைக்குட்டிகளுக்கான உணவுப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் ஊடாக உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் 3 கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்கள் திருட்டு!

மே 21, 2026
இலங்கைவிளையாட்டு

தேசிய விளையாட்டு விழா நடைப்போட்டியில் ருக்மால், கல்ஹாரி சாம்பியன்!

ஜூலை 6, 2026
இலங்கை

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கம்பஹாவில் கைது!

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube