பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், தொடர்ந்து இரண்டாவது வார இறுதியாகவும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாரிஸின் மத்திய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 70,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்ட நிலவரம் தொடர்பில் அல் ஜசீரா ஊடகவியலாளர் விர்ஜினியா பியட்ரோமார்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார்.
