நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டுள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சென் கிளையர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
