பாராளுமன்றத்தில் இன்று (20) நிலவிய பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் சீர்குலைக்கும் நடத்தை காரணமாக அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
“அவையில் குழப்ப நிலையை ஏற்படுத்தியதால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை அவையிலிருந்து வெளியேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அந்த உத்தரவைச் செயல்படுத்துங்கள்.” என்றார்
