Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை!

அக்டோபர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், வழமையான சூழ்நிலையில் நாளொன்றுக்கு சுமார் 74,000 எரிவாயு சிலிண்டர்களே சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக வழமையான விநியோகத்தை விட சுமார் 25 சதவீதம் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் லாஃப்ஸ் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, லிட்ரோ எரிவாயுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, லிட்ரோ எரிவாயுவுக்கான நாளாந்தத் தேவை 1,100 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,600 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ஒக்டோபர் 31ஆம் திகதி மற்றுமொரு 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்

ஆகஸ்ட் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை பெருந்தோட்ட மக்களின் கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை !

ஜூன் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசி லொறி கொள்ளை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 13 வரை ஒத்திவைப்பு!

நவம்பர் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube